Monday, February 25, 2008

எங்கள் மலேசியா.


மலேசியா எங்கள் தாய்நாடு. எங்கள் மூதாதையர் இந்திய நாடிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்தான். பெரும்பாலும் சஞ்சிக் கூளிகளாக

தருவிக்கப்பட்டவர்கள். அது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இருண்ட சரித்திரம். அதைப் பற்றி வேரொரு பதிவில் இடுகிறேன். இன்றைய
மலேசியா.....அன்று மலையகமாக இயற்கை சூழ்ந்திருந்ததால் மலாயா என்றழைக்கப்பட்டது.( மலையகம் ....பிறகு மலாய்க்காரர், 'மலாய்' மொழி என்று பெயர் உருவானதற்கு நெருங்கிய தொடர்பிருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு தெளிவு கிடைக்கும் )

முதலில், எழில் மிகுந்த எமது மலேசிய திருநாட்டைப் பற்றி சொல்லட்டுமா...? எங்கிருந்து ஆரம்பிப்பது ...சரி, அதன் அமைப்பில் இருந்து தொடங்குகிறேன்.

அழகிய மலேசியா- சிறந்த இயற்கை அமைப்பும், அழகும் ஒருங்கே பொருந்திய நாடு. மலேசியாவை, மேற்கு மலேசியா எனவும் கிழக்கு மலேசியா எனவும் நிலவியல் அடிப்படையில் பிரிக்கலாம். மேற்கு மலேசியாவின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்துள்ளது. எனவே, இது தீபகற்ப மலேசியா எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கு மலேசியா கலிமந்தான் தீவில் உள்ளது. சபா, சரவாக் எனும் மலேசியாவின் இரு மாநிலங்கள் இங்குதான் உள்ளன. மலேசியாவின் நிலவியலைப் பல வகையாகப் பிரிக்கலாம். அவை மலைகள், மலைத்தொடர்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளாகும்.

மலைகலும் மலைத்தொடர்களும்:
மலேசியாவின் நீண்ட மலைத்தொடர் 'தித்திவங்சா' மலைத்தொடர் ஆகும். வடக்கில் தொடங்கி தெற்கு வரை படர்ந்திருக்கும் இது தீபகற்ப மலேசியாவில் உள்ளது. மலேசியாவின் உயரமான மலைத்தொடர் 'குரோக்கர்'( Crocker).இது சபா மாநிலத்தில் உள்ளது. மலேசியாவின் முல்லிய
மலைத் தொடர்களில் லேடாங் மலைத்தொடர், தாஹான் மலைத்தொடர், நாக்காவான் மலைத்தொடர், ஈரான் மலைத்தொடர் போன்றவை
குறிப்பிடத்தக்கவையாகும்.

மலேசிய மலைப்பகுதிகளில் தேயிலை மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பல்வகை பூச்செடிகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி, மலைப் பிரதேசங்களில் உள்ள உல்லாசத் துறையை ஊக்குவிக்கின்றன. இவற்றால் நாட்டிற்கு நல்ல வருவாய் கிடைக்கின்றது.
உதாரணத்திற்கு கேமரன் மலை, கெந்திங் மலை உல்லாசத் தளங்களைச் சொல்லலாம்.

சமவெளிகள்:
மலேசியாவில் பெரும்பாலும் பயிர்த்தொழில்கள் சமவெளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கெடா ( கடாரம் ஆண்ட இராஜேந்திர சோழன் ஞாபகம் வருகிறதா ) மாநிலத்தின் மூடா சமவெளி மிகவும் பெரியது. இங்கு அதிகமாக நெற்பயிரிடப்படுவதால் இச்சமவெளியை மலேசியாவின்
'நெற்களஞ்சியம்' என்று அழைப்பர்.

கிளந்தான் மாநில ஆற்றோரப் பகுதிகளும் சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணாம் பகுதியும் பயிர்த்தொழிலுக்கு ஏற்ற சமவெளிகளாகும்.
மலேசியாவில் கிள்ளான் பள்ளத்தாக்கும் கிந்தா பள்ளத்தாக்கும் முக்கியமானவையாகும். மலேசிய மக்கள் தொகையில் அதிகமானோர் இங்குதான் வாழகின்றனர். பல பட்டணங்கள் இப்பள்ளத்தாக்குகளில் உருவாகியுள்ளன. கிந்தா பள்ளத்தாக்கு முன்பு உலகிலேயே அதிக அளவில் ஈயம் தோண்டப்பட்ட பகுதியாகும்.

கடற்கரைப் பகுதிகள்:
மலேசியாவின் கடற்கரைப் பகுதிகள் மிகவும் அழகானவை; பிரசித்திப் பெற்றவை. உலகமெங்கிருந்தும் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடங்களில்
மலேசியக் கடற்கரையும் அடங்கும். அவை கிளந்தானில் 'ச்சாகாயா பூலான்' (Cahaya Bulan) கடற்கரை, பினாங்கில் பத்து பெர்ரிங்கி (Batu Peringgi)
கடற்கரை, லங்காவியில் பந்தாய் பாசீர் பூத்தே (Pantai Pasir Putih) கடற்கரை, நெகிரி செம்பிலானில் 'போர்ட்டிக்சன்' கடற்கரை போன்றவை அடங்கும்.
சதுப்பு நிலக்காடுகள்:மலேசியாவின் சில பகுதிகளில் சதுப்பு நிலங்களைக் காணலாம். சதுப்பு நிலங்களில் காண்டா மரக்காடுகள் நிறைந்துள்ளன. மலேசியாவில் ஜொகூர் மாநிலத்திலுள்ள எண்டாவ், ரொம்பின் பகுதிகளிலும் சிலாங்கூர் மாண்-இலத்திலுள்ள கோலாடிலாங்கூரிலும், சபா மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும், சரவாக் மாநிலத்தின் தென்மேற்கு கரையோரத்திலும் சதுப்பு நிலங்கள் உள்ளன.

மலேசியா, பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் 'பூமத்திய ரேகை' வாநிலையைக் கொண்டுள்ளது. வெப்பநிலை - ஆண்டு முழுதும் உயர்ந்தே
காணப்படுகிறது ( 26'C - 28'C ). இங்கு ஆண்டு முழுதும் மழை பெய்யும்.இருப்பினும் பருவ மழைக்காலங்களில் பெரும் மழை பெய்யும். பருவக் காற்றானது - வடகிழக்குப் பருவக்காற்று -( நவம்பர் முதல் மார்ச் வரை ) / தென்மேற்கு பருவக் காற்று - ( மே முதல் செம்டம்பர் வரை).

பல்லின மக்கள் வாழும் நாடு மலேசியா. இங்கு மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பழங்குடியினர் மற்றும் பலர் 'ஒற்றுமையாக' வாழ்ந்து
வருகின்றனர். பல இன மக்களின் பல்வேறு கலை, கலாச்சாரங்கள் மலேசியாவுக்குத் தனித்தன்மையைத் தருகின்றன.

================

16 comments:

Anonymous said...

it is nice post to read & to know more abt. Malasiya.

it is a good thing to know abt. your patriotism even though your forefathers belonged to Tamilnadu.

gifted persons

')) said...

NanRu naNparE

')) said...

நட்சத்திரக் கிழமை வாழ்த்துக்கள்.

மலேசியா பற்றிய உங்களின் இப் பதிவு மிகவும் அருமை. பல புதிய சங்கதிகளைத் தெரிந்து கொண்டேன்.

/* அது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இருண்ட சரித்திரம். அதைப் பற்றி வேரொரு பதிவில் இடுகிறேன். */

உங்களின் இப் பதிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மலேசியாவிற்கு மட்டுமல்ல இலங்கை, மற்றும் பல ஆபிரிக்க நாடுகளுக்கும் எம்மினத்தவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். இவர்கள் சென்ற நாடுகளில் அனுபவித்த இடும்பைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

/* சஞ்சிக் கூளிகளாக */

விளங்கவில்லையே? எழுத்துப் பிழையா? அல்லது இப்படி ஒரு சொல் மலேசியாவில் புழக்கத்தில் உள்ளதா?

')) said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வணக்கம் மலேசியரே... வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

')) said...

இதுவரை எமது நட்சத்திர வார முதல் பதிப்பையொட்டி வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்பர் 'வெற்றி' கேட்டதற்கு முதலில் விளக்கிவிடுகிறேன்.

'சஞ்சிக் கூளி' என்பது இங்கு மலேசியர்களிடையே ( குறிப்பாக தமிழ் உணர்வோடு வாழ்பவர்களுக்கு வழமையான ஒன்றே!)

'சஞ்சி' என்பதற்கு ஒப்பந்தம் என்று பொருள் கொள்ளலாம். அந்த காலத்தில் ( ஆங்கிலேயர் 'பிரிட்டீஷ்' காலத்தில் இந்தியாவிலிருந்து தென்னகத்து இந்தியர்களை - தமிழர்களை ஒப்பந்த( சஞ்சி ) அடிப்படையில் வேலைக்காக கப்பலில் கொண்டுவரப்பட்டவர்கள்தாம் எமது மூதாதையர்கள்.

ஒரு குறிப்பிடத்தக்க தகவல் யாதெனில், 'சஞ்சி' எனும் சொல்லே இப்போது மலாய் மொழியில் ( எங்கள் நாட்டு தேசிய மொழி)ஜன்ஜி (Janji) என்று மருவி புழங்கப்படுகிறது, அதே அர்த்தத்துடன்!

')) said...

நட்சத்திர வாழ்த்துகள். அழகாக எளுதியுள்ளீர்கள்.

நட்சத்திர வாரத்திற்கு பிறகு நீங்கள் மலேசியா பற்றி எழுதியவற்றை தமிழ் விக்கியில் மலேசியா/மலேசியா தொடர்பான கட்டுரைகளில் சேர்த்து அவற்றை வளமைப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

')) said...

நட்சத்திர வார வாழ்த்துகள் வாசுதேவன் இலட்சுமணன். நான் பதிவுலகிற்கு வருவதற்கு முன்பே உங்களது இடுகைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

')) said...

நட்சத்திர வாழ்த்துக்கள்... மலேசியாவைப் பற்றிய நல்ல தொடர்...

')) said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் .

அருமையான பதிவு.


இந்த வேர்ட் வெரிஃபிகேஷனை தூக்கிருங்க. குறைந்தபட்சம் இந்த நட்சத்திர வாரத்திற்காவது.

பின்னூட்டுபவர்களுக்கு எளிதாக இருக்கும்.

மடரேஷன் இருக்குதானே?

')) said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நன்பரே!

மலேசியாவின் நிலவரங்களையும் அங்கே நம் தமிழர்களது நிலைமைகளையும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி!

மேலும் அறிய ஆவல்.

நன்றி

')) said...

/* சஞ்சிக் கூளிகளாக */
>விளங்கவில்லையே? எழுத்துப்
>பிழையா?

'சஞ்சிக் கூலிகளாக' என்றிருக்க வேண்டும். கூலம் = தானியம்,
முன்பு பணிக்குச் சம்பளமாகக்
கூலத்தைப் படியளந்தனர். எனவே, பணியாள் = கூலி. இவ்வார்த்தை ஆங்கிலத்தில் Cooley என்றானது.

---

மலேசியா/சிங்கைத் தமிழர்களின் பதிவுகளுக்கு ஒரு பட்டியல் தரவேண்டுகிறேன். நன்றி.

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

')) said...

நா.கணேசன் அவர்களே...
ஆமாம்! சஞ்சிக் கூலி என்றுதான் இட்டிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக் காடியமைக்கு நன்றி.

')) said...

துளசி கோபால்,

கேட்டுக் கொண்டதற்கிணங்க வேர்ட் வெரிஃபிகேஷனை தூக்கிட்டேனுங்க!

')) said...

ஜே.கே அவர்களின் அழைப்புக்கு தலைவணங்குகிறேன்.நன்றி.

')) said...

Natchathira Vaazthukkal Mudhalil!

Malaysiya Election pathi yarachum poduvangannu parthen! Neengale pottuttenga!

Nandri!