Tuesday, April 24, 2012

என்னகத்துள் என்னைநாடி...2


என்னகத்துள் என்னைநாடி.....


என்னகத்துள் என்னைநாடி எங்கு நாடி ஓடினேன், 
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாது ஆகையால்,என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்,என்னகத்துள் என்னை அன்றி யாதுமொன்றும் இல்லையே!சிவவாக்கியர் செய்யுள்(255)

சிங்கையில்....

மலேசிய சிங்கப்பூர் நிகழ்ச்சி தொடர்பாக கடந்த ஆண்டு நண்பருடன் சிங்கைக்கு அடிக்கடி சென்றுக்கொண்டிருந்த போது, ஒரு கடைக்கு முன்னே எடுக்கப்பட்ட படம்.
 
ஏன் எதற்காக அப்படி மாட்டியுள்ளனர் ? மக்களைக் கவர்வதற்காகவா ?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு .....


நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்து இருக்கிறேன்.வலைப்பூவில் அடியேன் எழுதுவது குறைந்து விட்டதை பல நண்பர்கள் சுட்டிக் காட்டினர். அதற்காக எழுத வேண்டுமா? என்று கேட்டுக்கொண்டேன், என்னை நானே! பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன நம்மைச்சுற்றி. இடைநிலைப் பள்ளிச்சூழல் பல்வேறு மாற்றங்களையும் தேவைக்கும் அதிகமான பணிச்சுமைகளையும் புகுத்துகிறதோ என்று சில சமயங்களில் எண்ணத் தோன்றும். அவ்வளவு வேலைகள்!

என்ன சார், பள்ளி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தானே! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனாலும், பாருங்கள்.....!

இப்படி...சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்றுதான் வருகிறேன்.
கடந்த ஆண்டு ( 16.09.2011 )சிங்கை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திற்குச் சென்றிருந்தபோது....