Monday, January 14, 2008

பொங்கலோ பொங்கல்!


பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பண்பாட்டுக்கு முத்திரை பதிக்கிற விழா. மண்பானையில் உலையிட்டு, பால் ஊற்றிக் கொதிக்க வைத்து, அரிசியைக் களைந்துபோட்டு அது வெந்ததும், வெல்லத்தை இடித்துப் போட்டு, இறக்கிவைப்பதும், கரும்புகளை வைத்து, பொங்கலிட்ட பானையுடன் படையல் செய்து கதிரவனுக்கு நன்றி கூறி வழிபடுவதும் வாழையடி வாழையாகக் கடைப்பிடிக்கப்படும் பண்பாட்டுக் கூறுகள்.


அப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் உலகத் தமிழர்களே....


அமைதி, நிம்மதி, நேசம், ஒற்றுமை என்பதே உண்மையான கொண்டாட்டம்.

உங்களின் தூய உள்ளத்திலிருந்து வழங்குவதே வாழ்க்கையின் மகிழ்ச்சியாகும்.


அனைவரது உள்ளங்களிலும் குதூகலம், கலகலப்பு, புத்துணர்வு பரவட்டும்.

சூரிய ஒளிபோன்று - உள்ளூற பிரகாசிக்கின்ற ஒளியே மகத்தானது.

உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

1 comments:

Anonymous said...

வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் கனிந்த வணக்கம்.

பொங்கல் ஸ்பெஷலாக ரிமிக்ஸ் விவேகம் ( கவனிக்க vivegamm ) வெளிவந்துள்ளது.

எமது பழைய பதிவுகளைப் பார்க்க
http://www.vivegam.blogspot.com
செல்லவும்.

இனி பதிவுகள் யாவும் புதிய விவேகத்தில் (http://www.vivegamm.blogspot.com)வரும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

-அன்புடன்,
வாசுதேவன் இலட்சுமணன்
மலேசியா.