Wednesday, January 9, 2008

சொந்த நூல் நிலையம் வேண்டும் !




வாசிப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது, சுவாசிப்பதைப் போன்று. நூல்கள் வாசிப்பதை சிறுவயது முதல் பழக்கப்படுத்தியவர்கள் சிறந்த கல்விமான்களாகவும் அறிஞ்ர்களாகவும் திகழ்கிறார்கள். சிறுவர் சிறுமிகளுக்கு எவ்வாறாயினும் இப்பழக்கத்தை ஊட்டிவிட வேண்டும். ஆசிரியரின் தூண்டுதலைத் தவிர்த்து பெற்றோரின் பங்கு மிக முக்கியம்.



நூல்களைக் கடன் வாங்கிக் கற்பது நல்லதன்று; சொந்தமாக வாங்கி வைத்துக்கொண்டு கற்க வேண்டும். அதில் சில நன்மையும் உண்டு. சொந்தமாக உள்ள நூல்களில் எந்தவிதமான சிறு குறிப்புகளையும் எழுதி வைக்கலாம். கடன் வாங்கிப் படிக்கும் நூல்களில் அப்படிச் செய்வது எப்படி முடியும்? ஆதலால், வீட்டில் சொந்தமாக நூல் நிலையம் இருக்க வேண்டும். நல்ல நூல்கள் முந்நூறாவது இருப்பது நன்று. கற்றவர் என்றால் அவரிடம் 3000 நல்ல நூல்கள் சொந்தமாக இருக்க வேண்டும் என்று ஆங்கில அறிஞர் மார்க் பட்டீசன் கூறியுள்ளார்.



சொந்த நூல் நிலையம் குடுப்பச் சொத்தாக, கலைவளர்க்குங் கருவியாக, குடும்பத்தை உருவாக்கும் திருவாக அமையும். வீட்டில் நூல் நிலையம் இருந்தால் ஆண்களும் மட்டுமல்லாமல் பெண்களும் தாங்கள் விரும்பிய நூல்களை எடுத்துப் புலமை பெற்றுவிடக்கூடும். நூல்நிலையத்தில் அறிஞர்கள் நூல்வடிவாக இருந்து எந்த நேரத்திலும் வந்து உதவி செய்யக் காத்திருப்பார்கள்; நள்ளிரவிலும் நாடி வந்து ஐயம் தீர்ப்பார்கள்; தேடிவந்து இன்பமளிப்பார்கள். எந்த நிலையிலும் நடித்தரக் குடும்பத்தினர் சொந்தமாக தலைசிறந்த இலக்கியங்களை வாங்கி வைப்பது கடினமான செயலாகாது. மன்மிருந்தால் வழியுண்டு.

பண வறுமையினும் மன வறுமையே நூல்களை வாங்கத் தடையாகிறது எனலாம்.



சொந்த நூல் நிலையம் குடும்பப் பண்பாட்டை வளர்க்குஞ் சாதனம் என்றுண்ர்வீர்!

2 comments:

Anonymous said...

www.noolaham.net

')) said...

முற்றிலும் உண்மை. எனக்கும் புத்தகங்களை சுயமாக வாங்குவதிலேயே தான் விருப்பம்.