பினாங்கு மாநிலம் பல வரலாறுச் சிறப்புக்கள் கொண்டது. தமிழகத்தினர்க்கு பெரும்பாலும் பினாங்கு நிரம்ப பிரபலம்; மலாயா என்பதைவிட! முதன் முதலாக பிரிட்டிஷார் காலெடுத்து வைத்ததும் இந்த பினாங்குத் தீவில்தான்.
இங்கிருந்து தங்களின் துரைத்தனத்ந்த் (காலனித்துவம்) தென்கிழக்காசியாவில் பல இடங்களுக்கு விரிவுபடுத்தினர். மற்றொரு சிறப்பு யாதெனில், இங்குதான் தென்கிழக்காசியாவிலேயே முதன் முதலாக ஆங்கிலப் பள்ளியைத் தோற்றுவிக்கப்பட்டது.
1816இல், அக்டோபர் 21ஆம் திகதியன்று இந்த ( மேலே காணப்படும் ) 'பிரி ஸ்கூல்' ( Penang Free School ) -ஆங்கிலப் பள்ளி தொடங்கப் பெற்றது. அன்றைய பிரிட்டீஷ் அரசின் மத குருவாக இருந்த ரெவரெண்ட் ஆர்.எஸ்.ஹட்சிங்ஸ் என்பவரே இப்பள்ளி தோன்றக் காரணமாக இருந்தவர்.
இன்று இது மாநில அருங்காடியகமாக மாற்றப்பட்டுள்ளது. 1927இல் 'பிரி ஸ்கூல்' "கிரீன் லேன்" பகுதிக்க் மாற்றப்பட்டது. ரெவரெண்ட் ஹட்சிங்ஸ், ஆரம்பத்தில் ஏழைக்குழந்தைகளுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் கல்வி போதிக்கும் நோக்கத்திலும், அக்காலக்கட்டத்தில் பினாங்கில் வசித்து கொண்டிருந்தவர்களுக்குத் தாய் மொழியையும் போதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பள்ளியை அமைக்க அன்றைய அரசிடம் முறையாக அனுமதி பெற்றார்.
குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், அப்பள்ளியில் பயில்கின்ற பல்லின குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பினால் ஆங்கிலமும் போதிக்கப்பட்டது. மேலும் உள்ளூர் ஆசிரியர்களைக் கொண்டு இப்பள்ளியில் தமிழும், மலாய் மொழியும் போதிக்கப்பட்டது.
தாய்மொழிக் கல்வியுடன் தொழில் கல்வியும் இந்த 'பிரி ஸ்கூலில்' போதிக்கப்பட்டது என்பதும் கூடுதல் தகவல்.
இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு பொதிய ஆதரவு இல்லாத காரணத்தால் தமிழ், மலாய் மற்றும் தொழில் கல்வி போதிப்பது நிறுத்தப்பட்டது!
3 comments:
வணக்கம் ஐயா, நலமாக இருக்கிறீர்களா?
ஐயா, நானும் மற்ற சில மலேசிய தமிழ் வலைபதிவர்களும் ஒன்றிணைந்து ஒரு தமிழ் அகப்பக்கத்தை திறப்பதற்கு எண்ணியுள்ளோம். அவ்வகப்பக்கத்திற்கு "தமிழ்ச்சுவடி" எனப் பெயரிட்டுள்ளோம். அகப்பக்கத்திற்கான வடிவமைப்புத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நான் (ஓலைச்சுவடி), இராஜா
( ராஜாராக்ஸ்), விக்னேஷ்வரன்
( வாழ்க்கைப் பயணம்) ஆகிய மூவர் இக்குழுவில் இருக்கின்றோம். தங்களையும் எங்கள் குழுவில் இணைத்துக் கொண்டு தமிழ்சுவடி அகப்பக்கத்தை மேலும் சிறப்புற இயங்கவைக்கக் கருதியுள்ளோம். மேலும், பல மலேசிய வலைப்பதிவர்கள் இக்குழுவில் இடம்பெறுவர். தாங்கள் இத்திட்டத்திற்கு சம்மதித்தால் தயவு செய்து என் மின்னஞ்சலுக்கு கடிதம் அனுப்புங்கள், நன்றி.
sathis_divine@yahoo.com.sg
தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும்,
ஓலைச்சுவடி ஆசிரியர்,
சதீஷ் குமார் கிருஷ்ணன், ஈப்போ
அன்பு சதீஷ் குமார்,
கனிந்த வணக்கம். வலைப்பதிவின் வழி ஒத்த சிந்தனையாளர்கள் ஒன்றிணைவது மகிழ்ச்சியளிக்கிறது.
உங்கள் முந்தைய மறுமொழியைப் பார்த்த பின் உங்கள் 'ஓலைச்சுவடி' வலைப்பதிவை ஒரு நோட்டம் இட்டேன். அகம் மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள், சதீஷ்.
எம்மையும் அன்புடன் அழத்தமைக்கு மிக்க நன்றி. விரைவில் மின்னஞ்சல் இடுகிறேன்.
எமது மின்னஞ்சல் : vivegam_vas@yahoo.com
hi vasudevan sir...i'm one of ur student from smktds(form 3)..ur blog is rely nice...keep it up!!!
Post a Comment