Monday, March 21, 2011

இருவேறு உலகத்து இயற்கை...



'இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு' (குறள்:374)

விளக்கம்:
இந்த உலகம் இரண்டு வேறுபட்ட இயல்புகளை உடையது. பொருளை முதன்மையாகக் கொண்டு வாழ்வோர் ஒரு வகை; அறிவை முதன்மையாய்க் கொண்டோர் மற்றொரு வகை.

'திருவேறு' என்பது பொருள்களையும் புலன்களையும் அடைப்படையாகக் கொண்ட இகலோகத் தவ வாழ்க்கை. புறக்கண்களைத் திறந்துகொண்டு பெறும் அனுபவங்கள் அத்தனையும் இதில் அடங்கும்.

'தெள்ளியர் ஆதலும் வேறு' என்பது ஞானத் தெளிவு பெற்று ஆன்மா அனுபவம், இறை அனுபவம் பெறுவதை அடிப்படையாகக் கொண்ட பரலோகத் தவ வாழ்வு. அகக் கண்ணைய் திறந்து கொண்டு அனுபவங்களைக் கொண்டது.

அறிவுத் தெளிவும் மனப் பக்குவமும்தான் தவத்தின்வழி பெறப்படும் பயன்கள்.
எத்தனை பக்தி இருந்தாலும் ஏராளமாய் தான தர்மங்கள் செய்திருந்தாலும் 'ஞானத்தெளிவு' பெறாதவரை முழுமையான அனுபவத்தைப் பெற முடியாது. பிறவித் தொடரிலிருந்து விடுபடவும் முடியாது!

வினை விளைவுத் தத்துவங்களைக் கொண்ட நம் வாழ்க்கை என்பது இந்த பூமி சார்ந்தது. இகலோகம் எனும் புவிசார்ந்த வெற்றிகளை மட்டுமே கொடுக்க வல்லது.

தவம் என்பது இந்த வினை விளைவு வாழ்க்கையிலிருந்து 'விடுபட்டுப் பரத்தை' நோக்கிப் பயணிக்கும் வானம் சார்ந்த ஒரு...வகை வித்தை. பரலோகம் எனும் பரம்பொருளை அடையும் சாதனா வெற்றிகளைச் சார்ந்தது.

3 comments:

')) said...

உயர்ந்த தத்துவங்களை எளிமையாக எடுத்துரைத்த பாங்கு பாராட்டுக்கு உரியது.வாழ்த்துகள்.

Anonymous said...

அறிவே சிறந்த ஒன்று என்பது எனது கருத்து.
திருமலர்,தாமான் யுனிவர்சிட்டி இடைநிலைப்பள்ளி

Anonymous said...

அறிவே சிறந்த ஒன்று என்பது எனது கருத்து.
திருமலர்,தாமான் யுனிவர்சிட்டி இடைநிலைப்பள்ளி