Tuesday, March 15, 2011

எதிரில் விளையாடுபவன் எதிரியல்ல!



சாதாரண பந்து விளையாட்டைப் பார்த்திருக்கிறோம். எதிர் அணியில் விளையாடுபவனை எதிரியாகப் பார்ப்பவர்களை ( பாதகமாக விளையாடுபவர்களை ) 'விளையாடத் தகுதியற்றவன்!' என்று ஒதுக்கி வைப்பதுதானே விளையாட்டுக்குரிய விதியாக உள்ளது!

இந்த உலகமும் ஒரு விளையாட்டுத் திடலே! வாழ்க்கையில் உங்களுடன் உடன்பாடாக நடந்து கொள்பவர்கள் உங்கள் அணியின் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். உங்களுடன் இணைந்து பாடுபடுகிறார்கள்.

உங்களுக்கு எதிர்ப்பாக நடந்து கொள்பவர்கள் ஏதோ ஓர் எதிர் அணியின் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். உங்களுக்கு எதிராக விளையாடுகிறார்கள்.

இந்த இயல்பைப் புரிந்து கொண்டால் எதிர்ப்பாக நடந்து கொள்பவர்கள் மீது கோபமோ, ஆத்திரமோ தோன்றாது.

உங்களுக்கு எதிர்ப்பாக விளையாடவேண்டி, விதியினால் தேர்ந்தெடுக்கப்பெற்றோர் எதிரியின் களத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் களத்தில் உங்கள் அருகிலேயே இருந்துகொண்டு கூட உங்களுக்கு எதிராக விளையாடலாம்.

எந்த நிலையில் விளையாடினாலும் அந்த நபரை எதிர் அணியில் விளையாடுபவராய்த்தான் பார்க்க வேண்டுமே தவிர எதிரியாய்ப் பார்க்கக் கூடாது.

விளையாட்டு முடிந்தவுடன் அன்பைப் பரிமாறிக் கொள்லத் தயங்கவும்கூடாது. இதுதான் இந்தப் புவிவாழ்க்கை என்னும் விளையாட்டிற்குரிய அடிப்படை விதியாகும்.

இந்தக் கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்கப் பழகிக் கொண்டால் விருப்பு வெறுப்பை வெல்லலாம். மனத்துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம்.

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண‌
நன்னயம் செய்து விடல்.' (குறள்: 314)

என்னும் தமிழ்மறையின் தத்துவத்தை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

அன்பே சிவம்!

4 comments:

')) said...

வாசு,உங்களை மாதிரி எல்லோரும் இருந்தால் இப்பூவுலகம் சொர்க்கமாக அல்லவா மாறி இருக்கும்.மிக எளிமையான முறையில் புரிய வைத்திருக்கிறீர்கள்,நன்றி நண்பரே!

')) said...

திருவள்ளுவருக்குச் சமர்ப்பணம், எல்லாப் புகழும்!

அன்பே சிவம்!
இல.வாசுதேவன்.

Anonymous said...

சார்...ரொம்ப!!! சூப்பரா இருக்குது

Anonymous said...

சார்...ரொம்ப!! நான் எழுதியது எப்படி இருக்கு!!!

யுவராஜன்
SMK Taman Universiti....

இது எப்படி இருக்குது??