Saturday, March 20, 2010

என் தந்தையின் 3ஆம் ஆண்டு நினைவுநாள்

அமரர் திருமிகு.நா.இலட்சுமணன். பி.ஐ.எஸ் ( ஓய்வு பெற்ற தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் )

இன்று என் தந்தையின் 3ஆம் ஆண்டு நினைவுநாள். அவரது நினைவுமலரிலிருந்து..........

அமரர் திருமிகு.நா.இலடசுமணன் அவர்கள், தமது 17‍வது வயதில் ஆசிரியர் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு தொடர்ந்து சுமார் 40 ஆண்டு காலம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர்.

அவர் தமிழுக்காக குறிப்பாக தமிழ் இயக்க வளர்ச்சிக்காக இளைஞர் பருவத்திலிருந்தே பொது இயக்கங்களுடன் த‌ம்மை இணைத்துக் கொண்டு சேவையாற்றியுள்ளார். அவர் இளைஞர்ப் பகுதி செயலாளராக இருந்த பொழுது, தமிழகத்துத் தமிழரிஞர்களை மலாயாவுக்கு வரவழைத்து தமிழின மக்களிடையே தமிழுணர்வு ஊட்டியுள்ளார். ம.இ.கா வின் வழி சமூகப்பணியாற்றிய சிறந்த தொண்டர்.

ஆசிரியர்ப் பணி அறப்பணி என்பதை தாம் பணியாற்றிய பள்ளிகளில் எல்லாம் கடமையுணர்வுடன் தமது செயல்நடவடிக்கையின் வழி மெய்ப்படுத்தியுள்ளார். அவர் பணியாற்றிய பள்ளி ஆசிரியர் பெருமக்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். அவர் மாணவர்களுக்குக் கணிதம் கற்பிக்கும் பாங்கு மகிழ்ச்சிகரமானது. மாணவர்களின் கவனத்தைக் கவருவதில் வல்லவர். குழந்தைகளின் பொது அறிவைத் தூண்ட அடிக்கடி கேள்விகள் கேட்டும், விடுகதை, புதிர்க் கேள்விகள் கேட்டும் சிந்தனை வளர்ச்சியைத் தூண்டியவர். சரியாக விடையளிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்குவதை தமது இறுதி காலம் வரை செய்து வந்தார். வாசிப்பது அவருக்கு சுவாசிப்பது போன்றது என்றால் மிகையாகாது.

காலஞ்சென்ற என் தந்தையார் அவர்கள் கண்டிப்பும் கடமையுணர்வும் மிக்கவர். ஆனாலும் எல்லோரிடமும் அன்பு பாராட்டுவார். ஜொகூர், சா'ஆ வட்டாரத்தில் தம் ஒத்த வயது மலாய்க்காரர் , சீனர் சமூகத்தினரிடம் நட்புடன் இருந்து 'ருக்கூன் தெதாங்கா' இயக்கத்தின் வழியும் நற்சேவையாற்றியுள்ளார்.

ஆரம்பக் காலத்தில் தமது ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைவதிலும். கைவினைப் பொருட்கள் செவதிலும் கவனம் செலுத்தியவர், பிற்காலத்தில் தட்டச்சுப் பொருள் மற்றும் தையற் கலையிலும் சுயமாகாக் கற்றுத் தேர்ந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் நல்லாசிரியராகத் திகழ்ந்து நேர்மையுடனும் தர்மத்தின் வழி வாழ்வை செம்மையாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார். அவரது மறைவு ஈடுசெய்ய இயலாதது!

அப்பாவின் நினைவலைகளில்.....

பிரபஞ்ச அச்சில் மறைதல் என்பது வேறொரு மாற்றமே !

4 comments:

')) said...

வணக்கம். மரத்தின் நிழல் வெயிலில் தெரியும் என்பார்கள்.அது பொல் ஒருவர் இல்லாத பொதே அவரின் அருமை நமக்கு தெரிய வ‌ரும். தந்தையை இழ்ந்தது பெரிய இழப்புதான் என்றாலும் அவர் நமக்காக விட்டுச் சென்ற படிப்பினைகள் என்றும் நம்மை வழின‌டத்தும் எண்பது திண்ணம்.நன்றி

')) said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, நண்பரே!
அன்பான வார்த்தைக்கு நன்றி.

')) said...

நண்பர் விவேகன் தந்தையின் நினைவில் வைத்து நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்து நடை வாசிக்க சுகமாக்க உள்ளது.நன்றி. நட்புடன்....விடாமல் எழுதுங்கள்.
கோ.புண்ணியவான்.

')) said...

நண்பர் விவேகன்.
உங்கள் தந்தையை நினைவு கூர்ந்து எழுதியது உங்களின் பண்பைக் காட்டுகிறது. வாசிப்புக்கு எற்ற எளிய நடை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
கோ.புண்ணியவான்.