Monday, October 6, 2008

உங்களுக்கு எது ஏற்புடையதோ அதை உள்வாங்கிக் கொள்ளுங்கள்!




சில நேரம்....சில பொழுது ...... சோதனை வரும் போது.....

=================================================


மாணவன் தயாராகி விட்டால்....ஆசான் வந்து விடுவார்! எங்கிருந்தாகிலும்.


உன்னுடைய தலைவிதியை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையின் போக்கிலேயே நடைபோடு.......பிரபஞ்ச லயத்துடன்..!


உனக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அது இப்போது வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால் அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது.


இந்த தோல்வியை மறந்துவிடு,உனக்கு விதிக்கப்பட்டுள்ள இடத்திற்கு போக இது வழிகாட்டும்.


உன்னுடைய இருப்புக்கான நிஜமான நோக்கம் என்ன என்ற தேடலில் இறங்கு. உன்னுடைய சுயத்தோடு நீ ஒன்றிவிடு.


கடவுளின் விருப்பத்திற்கு உன்னை ஒப்படைத்துவிடு!


11 comments:

')) said...

புரியவில்லை... :(

')) said...

ஓடும் நதியில் தூக்கி எறியப்பட்டுவிட்டோம். இனி மிதப்பது ஒன்றே நம் கடமை - ஓஷோ

')) said...

விக்னேஸ்வரன், புரியவில்லையா...?
அதனால் என்ன...?

சரணாகதி தத்துவம் தெரியுமா..?
தெரிந்தால் நல்லது...தெரியாவிட்டால்
அதனால் என்ன...?

Just go with the flow....
( பிரபஞ்ச லயத்துடன் போ....)

வா(ழ்க்)கை ஓட்டத்தில் 'வெற்றி' மறைந்தே இருக்கிறது.

இன்னுமா...புரியவில்லை...?
பரவாயில்லை.

')) said...

சதீஸ்,

ஓ'டு'ம்..... என்பதிலிருந்து 'டு' எடுத்துவிட்டு வாசியுங்கள்; மௌனியுங்கள்.

')) said...

வணக்கம் ஐயா, மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்காக 'வலைப்பூங்கா' என்றப் பெயரில் ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.

அதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.

http://www.pageflakes.com/Valaipoongaa/

')) said...

இனிய நண்பர் வாசுதேவன்,

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எழுத்துவழி உங்களைச் சந்திக்கிறேன்.

நலமா நீங்கள்?

தங்களின் விவேகம் தொடர்ந்து பீடுநடையிடுவது கண்டு மகிழ்கிறேன்.

தங்களின் தூண்டுதலால் நான் உருவாக்கிய திருத்தமிழ் வலைப்பதிவைத் நீங்கள் பார்ப்பதுண்டா?

என்றென்றும் நன்றியுடன்,
சுப.நற்குணன்

')) said...

சற்று வித்யாசமான வலைப்பதிவு.

')) said...

<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">

*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்

*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்

மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.

இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்

')) said...

வணக்கம் ஐயா,

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

மேலும் தகவல்களுக்கு : http://olaichuvadi.blogspot.com/2008/12/blog-post_8685.html

')) said...

சிறப்பான கருத்துகளை வெளியிட்டுளீர்கள்....வாழ்த்துக்களும் நன்றியும்..

')) said...

இனிய அன்பரே வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்