Friday, July 11, 2008

நீண்ட இடைவெளிக்குப் பிறகு..வலைப்பூ பயிலரங்கு



இரு தினங்களுக்கு முன்பு, குளுவாங் ஹஜி மனான், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்ம் திரு.செல்வராஜா அவர்கள் அலைபேசியில் தொடர்புகொண்டார். "வலைப்பூ பயிலரங்கு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்த முடியுமா ?"

வலைப்பூ பயிலரங்கு நடத்தி வெகுநாட்களாகி விட்டது. இருந்தாலும் தமிழாசிரியர்களுக்கு இந்த ஊடகத் தொழில்நுட்பம் இன்னும் பரவலாக எட்டவில்லையே என்ற ஆதங்கம் இருந்துவந்தது.

"வரும் சனிக்கிழமை காலையில் முடியுமா ? " என தலைமையாசிரியர் வினவினார்.

"இயலாது.....எங்கள் பள்ளியில் மற்றொரு பாட சம்ந்தமான பயிலரங்கு நடைபெற உள்ளது. வேண்டுமானால்....பிற்பகல் 1.00 முதல் தொடங்கலாமே" என்று மாற்றுவழி சொன்னேன்.


தலைமையாசிரியர் உடனே...சம்மதித்தார். இணைய வசதி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்றேன். ஆவன செய்வதாகக் கூறியுள்ளார்.


ஏற்கனவே பலமுறை இம்மாதிரி பயிலரங்கு நடத்தியிருந்தாலும்.....பழைய கோப்புகளை மீட்டெடுத்துப் பாத்துக்கொண்டேன். சில திருத்தங்களுடன், ஆசிரியர்களுக்கு வழங்கவிருக்கும் ஆவணத்தைத் தயார் செய்துள்ளேன்.


நாளை மீண்டும் 'வலைப்பூ' அறிமுகப்படலம் காணவிருக்கிறது.

எத்தனை பூக்கள் பூக்கும் என்று யாமறியேன்....பராபரமே!

8 comments:

')) said...

வணக்கம் ஐயா, நாளை நடைப்பெறவிருக்கும் வலைப்பூ கருத்தரங்கில், ஹஜி மனான் பள்ளி ஆசிரியர்களைத் தவிர்த்து மற்றவர்களும் பங்கு கொள்ள முடியுமா?

')) said...

அன்பு சதீஷ்க்கு,

அடியேன், வரவேற்கிறேன்.
மிந்தமிழ் செழிக்க யார் வேண்டுமானாலும் வரலாம்....
தலைலையாசிரியரிடம் அனுமதி வாங்குவதற்கு பொறுப்பேற்கிறேன்...
என்ன தயாரா.?

யாம் பெற்ற இன்பம்....பெருகுக...
இவ்வலைப்பூயெல்லாம்!

எல்.ஏ.வாசுதேவன்.

')) said...

வணக்கம் ஐயா,

தங்களுடைய அழைப்பிற்கு நன்றி, தற்போது நானும் குளுவாங்கில்தான் தங்கி வருகிறேன். பள்ளி விடுமுறையைக் கழிக்க குளுவாங்கிற்கு வந்த பொழுது, சாலை விபத்தில் ஒன்றில் சிக்க நேரிட்டது. அவ்விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறென்.

பூரண குணமடைந்ததும் உங்களை வந்துச் சந்திக்கிறேன். வடமாநிலங்களிலும் வலைப்பூ தொடர்பான பயிலரங்கை ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளதால், தங்களுடைய வழிகாட்டுதல் எங்களுக்குத் தேவை.

தங்களை எப்படி தொடர்புக் கொள்வது? கைப்பேசி எண்ணை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறீர்களா?

olaichuvadi@gmail.com

நன்றி.

')) said...

பயனான செயல். ஐயா, நானும் நண்பர் சத்தீஷ் அவர்களும் வட மலேசிய பகுதிகளில் வலைப்பதிவு பயிலரங்கு நடத்த நினைத்திருந்தோம். தூரதிஷ்ட வசமாக சத்திஷ் விபத்துக்குள்ளாகிவிட்டார். அவர் குணமடைந்ததும் கண்டிப்பாக பயிலரங்கு நடத்துவோம். எங்கள் முயற்சிக்கு உங்களின் ஆலோசனை பெரிதும் உதவும்.

அதிக மலேசிய வலைபதிவர்களை உருவாக்கினால், மலேசியர்களுக்கென திரட்டி செய்யும் திட்டமும் இருக்கிறது.

')) said...

அன்பர் சதீஷ்க்கு,

தாங்கள் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சியுற்றேன். சிகிச்சை எங்கு பெற்று வருகிறீர்கள் ? குளுவாங்கிலா ? தற்போது குளுவாங்கில் தங்கியிருப்பதாகத் தெரிவித்தீர்களே....எங்கு ?
எங்கு படித்து வருகிறீர் ?
உங்களைப்பற்றிய விபரம் தேவை.

நேற்று நடைபெற்ற வலைப்பூ பயிலரங்கில் கூட 'உங்களைப்' பற்றி வலைப்பூ வழங்கிய நண்பர்களைப் பற்றி கூறினேனே....
எப்படியிருப்பினும் நீங்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தொடர்பு கொள்ளவும்.
vasudev_70@hotmail.com
019-7628517

')) said...

அன்பு விக்னேஸ்வரனுக்கு,

நிச்சயமாக உங்களுக்கு என்னால் முடிந்த ஆலோசனைகள் வழங்குவேன். வலைப்பூ பயிலரங்கு பள்ளியில் நடத்துவதற்கு 'பகீரத'முயற்சி எடுத்த காலம் 2004 -2006 வரை. வரவேற்பு மிக மிகக் குறைவு. தற்போது பள்ளி நிர்வாகமே 'அழைத்தால்' மட்டுமே செல்கிறேன். சதீஷும் , நீங்களும் இம்மாதிரியான தடங்களுக்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும். முயற்சி திருவினையாக்கும்.

வாழ்த்துக்கள்.

')) said...

கண்டிப்பாக தயார் செய்துக் கொள்வோம். உங்கள் வலைபதிவை நீண்ட இடைவெளி இல்லாமல் அடிக்கடி புதுப்பிக்க வேண்டிக் கொள்கிறேன். பல பயனான தகவல்களை நீங்கள் மற்றவரோடு பகிர்ந்துக் கொள்ள முடியும் என பெரிதும் நம்புகிறேன்.

நன்றி.

')) said...

தற்போதைய பள்ளி சூழல், வேலைப்பலு மற்றும் இதர விவரிக்க இயலாத சிக்கல்கள் ( ஊழ்வினைப் பயனோ ?...தெரியவில்லை )

சிரிக்காதீர்கள்...வலைப்பூ எழுதுவதற்குமா 'விதி' விளையாடுகிறது...என்று !

வாழ்வில் சில சம்பவங்களுக்கு விடையோ...அர்த்தங்களோ...கிடைப்பதில்லை அன்பரே.