கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 14.06.2009 )மாலை 5.00க்கு மலேசியா, கோலாலம்பூரிலுள்ள துன் சம்பந்தன் கட்டடத்தின் 'சோமா' அரங்கில் 'மலேசியாவில் தமிழ்க் கல்வியும் கற்றல் கற்பித்தலும்' எனும் கருப்பொருளுடன் அடங்கிய கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலான 'ஆசிரியம்' வெளியீடு கண்டது.
இந்நூலின் ஆசிரியர் சுல்தான் ட்ரிஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் ஆவார்.
தமிழ்ப்பள்ளியில் தன்னுடைய ஆரம்பக் கல்வியை தொடங்கியதாலும், தமிழாசிரியராகப் பயிற்சிப் பெற்றுப் பணியாற்றியவர் என்ற நிலையிலும், ஆய்வு நிலையில் நூலாசிரியர் தொகுத்த கட்டுரைகள் யாவும் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாநாடுகளில் படைக்கப்பட்ட கட்டுரைகளும், சிறப்பு நிகழ்வுகளுக்காக எழுதப்பட்ட கட்டுரைகளும் மற்றும் மலேசியாவில் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்பான பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் அடங்கிய நூல் 'ஆசிரியம்'. மலேசியத் தமிழ்க் கல்வியியலில் முதல் தமிழ் நூல் என்றுகூட குறிப்பிடலாம்.
நீண்ட வரலாற்றினைக் கொண்ட மலேசியத் தமிழ்க் கல்வி மற்றும் கற்றல் கற்பித்தல் பற்றிய வளர்ச்சியினை, சவால்களை, செல்நெறிகளை ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இம்முயற்சிமலேசியா மற்றும் இதர நாடுகளிலுள்ள தமிழ் ஆய்வாளர்களின் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறார், இணைப் பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள்.

உமா பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலை மலேசிய அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் அவர்கள் வெளியீடு செய்தார்.
2 comments:
அய்யா,தங்கள் கருத்துகளைக் கண்டேன்,மிக்க மகிழ்கிறேன்.தங்களைப் போன்ற உணர்வாளர்கள் இருப்பதால்தான்
கல்வி சரியான பாதையில் செல்கிறது,
உங்களைப் போன்றவர்களுடன் தனிப்பட்ட முறையில் கருத்து பரிமாற்றத்திற்காக உங்கள் இணைய முகவரி தரமுடியுமா?
mstar2799@gmail'.com
kalvipoonga.blogspot.com
நன்று. இரா.புஷ்பலதா
Post a Comment