
இரு தினங்களுக்கு முன்பு, குளுவாங் ஹஜி மனான், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்ம் திரு.செல்வராஜா அவர்கள் அலைபேசியில் தொடர்புகொண்டார். "வலைப்பூ பயிலரங்கு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்த முடியுமா ?"
வலைப்பூ பயிலரங்கு நடத்தி வெகுநாட்களாகி விட்டது. இருந்தாலும் தமிழாசிரியர்களுக்கு இந்த ஊடகத் தொழில்நுட்பம் இன்னும் பரவலாக எட்டவில்லையே என்ற ஆதங்கம் இருந்துவந்தது.
"வரும் சனிக்கிழமை காலையில் முடியுமா ? " என தலைமையாசிரியர் வினவினார்.
"இயலாது.....எங்கள் பள்ளியில் மற்றொரு பாட சம்ந்தமான பயிலரங்கு நடைபெற உள்ளது. வேண்டுமானால்....பிற்பகல் 1.00 முதல் தொடங்கலாமே" என்று மாற்றுவழி சொன்னேன்.
தலைமையாசிரியர் உடனே...சம்மதித்தார். இணைய வசதி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்றேன். ஆவன செய்வதாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே பலமுறை இம்மாதிரி பயிலரங்கு நடத்தியிருந்தாலும்.....பழைய கோப்புகளை மீட்டெடுத்துப் பாத்துக்கொண்டேன். சில திருத்தங்களுடன், ஆசிரியர்களுக்கு வழங்கவிருக்கும் ஆவணத்தைத் தயார் செய்துள்ளேன்.
நாளை மீண்டும் 'வலைப்பூ' அறிமுகப்படலம் காணவிருக்கிறது.
எத்தனை பூக்கள் பூக்கும் என்று யாமறியேன்....பராபரமே!