Tuesday, March 16, 2010

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம்:5



"நான் உரைக்கும் வார்த்தைகள் எல்லாம் இறைவன் என்னிடம் கூறிய வார்த்தைகள். நான் சுயமாக பேசவில்லை" என்று சொன்னவர் வள்ளலார் என்றழைக்கப்பெறும் சிதம்பரம் இராமலிங்கம் எனும் மகான்.

பயணமோ ஆன்மிக யாத்திரை !....எனவே மனசை முன்கூட்டியே பக்குவப்படிதியதாலோ என்னவோ மகான்களின் நூல் தொடர்பு கிடைத்துவருகிறது.

இக்கருத்தை விளக்கும் பாடலைத்தான் .....

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம்
நாயகன் சொல் வார்த்தை அன்றி
நான் உரைக்கும் வார்த்தை அன்று!


....அப்புத்தகத்தில் கண்டேன்;நெகிழ்ந்தேன்.

கொஞ்சம் நேரம் கண்மூடி மீண்டும் விழித்தபோது அந்த அகண்ட விமான நிலைய பயணிகள் அமரும் இருக்கியில் தன்னந்தனியாக இருப்பதை உணர்ந்தேன்.

ஜோகூர் பாருவிலிருந்து வாடகை வண்டிமூலம் 'சாங்கி' விமான நிலையம் வந்தடைதேன்.கொண்டுவந்த இரு பைகளில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது -தோளில் மட்டிக்கொள்வது.பெரிய துணிப்பையின் அடியில் சக்கரங்கள் இருப்பதால் கனமாயிருந்தாலும் சுலபமாக தள்ளிச் செல்லலாம். இருப்பினும் பெரியதையும் சிறியதையும் செர்த்து வைத்துச் செல்ல நுழைவாயிலில் வரிசைக்கட்டிக் கொண்டு இருந்த தள்ளுவண்டி ஞாபகத்திற்கு வந்தது. உடனே எழுந்து நடந்தேன். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டு ஒட்டிக்கொன்டு இருந்த தள்ளுவண்டிகளில் ஒன்றை பின்னாடி இழுத்து வாட்டமாக முன்னுக்குத் தள்ளி வந்தேன்.

முதல்முறை தன்னந்தனியாக வெளிநாட்டிலிருந்து ( சிங்கை ) இன்னொரு நாட்டிற்குச் செல்கிறோமே.....கொஞ்சமாவது முன் ஜாக்கிரதை வேண்டாம்..?
இப்படியா....இரு பயணப்பைகளையும் அப்படியே விட்டு விட்டுச் செல்வது ?

ஏரணமாய் எச்சரிக்கை எண்ணங்களை ஏவிவிட்டது பாழாய்ப்போன 'மனம்'.

அட....இங்கு என்னைச் சுற்றி இருபது மீட்டர் சுற்றளவில் மனித நடமாட்டம் இல்லை! பிறகு ஏன் அலட்டிக்கொள்கிறாய்..? அதே மனம் சமாதானம் சொல்லிக்கொண்டது. சரி...சரி...பயணச்சீட்டும் கடவுப்பத்திரமும் சட்டப்பையில் இருந்ததால் வந்த‌ ஒரு மெத்தனப்போக்கு. கவனிக்கிறேன்..!

காற்சட்டைச் சோப்பினுள் இருந்த‌ இலத்திரன் படக்கருவியை உருவி வெளியே எடுத்துதேன். விசையை அழுத்தியதும்...சன்னமாய் எழும்பும் ஒலி கேட்டது. காட்சியை இலத்திரனில் பதிவாக்க தயார் என்பதைத் திரையில் நெரலையில் காண்பித்தது. இடது கையில் அக்கருவியை சற்றே 45 பாகைக்கு கையை நீட்டி ஒரு 'கிளிக்'.

'எனக்குள் ஒருவன் என்னைப் பிடித்தான்'!

அதை பத்திரமாய் வைத்துவிட்டு மீண்டும் அருட்பெருஞ்சோதி ஞானச்சித்தர் புத்தகத்தைத் திருப்பினேன். உனக்குத் தெரியுமா ? உனக்குத் தெரியுமா ?என்பதுபோல் அடுக்கடுக்காய் கேள்விகள்..? அதில் ... சிதம்பரம் இராமலிங்க பெருமானாரை நிழற்படம் எடுக்க பலர் பலமுறை முயன்றும் முடியாது போனது உனக்குத் தெரியுமா ? இறுதியாக ஓர் ஓவியர் கருங்குழியில் அய்யா அவர்களை நேரில் பலநாட்கள் பார்த்து வரைந்த மீசையுடன் கூடிய ஓவியமே அவருடைய உண்மையான‌ தோற்றம் என்பது தெரியுமா ?

மனதில் ஒரு 'கிளிக்'; பளிச்சென்று மின்னல் போன்ற ஒரு 'ஃப்லெஷ்'.


4 comments:

')) said...

வசு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.இமயம் சென்ற உங்கல் பயனம் இனிமை. தொடர்ந்து வீசட்டும் இமயத்தின் சாரல்.

')) said...

வசு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.இமயம் சென்ற உங்கL பயனம் இனிமை. தொடர்ந்து வீசட்டும் இமயத்தின் சாரல்.

')) said...

Ramalingga sumamigal is gerat. "vadiya payirai kandapotellam vadinen" enakku piditha avarathu thiruvarudpa varigal.

')) said...

அன்புகூர்ந்து வாழ்த்தியதற்கு நன்றி, கணேசன் சார். உங்கள் மறுமொழி உற்சாகமூட்டுகிறது.