திருக்குறள் கூறும் அறங்கள்:
* அன்பாய் இருப்பது அறம்
* உண்மை இன்பம் தருவது அறம்
* இனிமையாய்ப் பேசுவது அறம்
* கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம்
* நல்லதையே நாடுவது அறம்
* நன்மை தராதவற்றைத் தவிர்ப்பது அறம்
* மனதில் குற்றமற்று இருப்பது அறம்
இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம்:4
'கவனகர் அய்யா' தலைமையில் இமயமலை யாத்திரை.
சத்தியமான ஒன்றை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். திருக்குறளை ஞான மறைநூலாக 'விழிப்புணர்வோடு' பார்க்கத்தூண்டியவர் 'கவனகர் அய்யா' என்று மக்களால் கனிவுடன் அழைக்கப்பெறும் திரு.இராம. கனகசுப்புரத்தினம் அவர்கள்.
திருக்குறள், தமிழ் சமூகத்திற்குக் கிடைத்த மாபெரும் புதையல். இயற்றப்பெற்ற ஒவ்வொரு குறட்பாவும் ஒவ்வொரு வாழ்வியல் சூத்திரம். வாழ்க்கைப் பிரச்னைகள் அத்தனைக்கும் தீர்வு காண ஒரு நூல் உண்டென்றால், அது திருக்குறள் மட்டுமேயாகும்.
* வாழ்வாங்கு வாழ விரும்புவோர்க்கு அது ஒரு வாழ்க்கை நூல்
* மெய்யுணர்வு பெற விரும்புவோர்க்கு அது ஒரு ஞான நூல்
* யோகம் பயில விரும்புவோர்க்கு அது ஒரு யோக நூல்
* அரசியல்வாதிகட்கோ அது ஒரு அரச தந்திர நூல்
* காதல் மலர்ந்த இளம் உள்ளங்களுக்கோ அது ஒரு காதல் நூல்
* அதுபோல் வணிகமோ தொழிலோ நடத்தி வளம்பெற விரும்புவோர்க்கு அதற்குரிய இரகசியங்களைக் கூறும் தொழில்நுட்ப நூல்
இப்படி பல்வேறு கோணத்திலிருந்து தமிழ்ச்சமூகம் விழிப்புணர்வுடன் திருக்குறளைப் பயின்று அதன்வழி வாழ்வாங்கு வாழ வகைசொல்லும் ஒரு சான்றோர்,'பதினாறு கவனகர்' திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம் அவர்கள்.
திருக்குறளுக்கு 'கவனகர் அய்யா' உணர்வுரை எழுதியுள்ளார்.
இவர் 1330 குறட்பாக்களையும் மனதில் பதியவைத்துள்ள ஒர் அற்புத வித்தகர். குறளின் எண்ணைக்குறிப்பிட்டால் போதும் குறளை ஒப்புவிப்பார். மற்றுமொரு ஆச்சரியம் அதற்குரிய ஆங்கில மொழிப்பெயர்ப்பயையும் ( கவியோகி சுத்தானந்த பாரதியாரால் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது ) இந்த அதிசய மனிதர் அணியப்படுத்தியுள்ளார்.....உதாரணத்திற்கு குறள் எண் 34 என்றால்....
" ....ம்ம்ம் எண் முப்பத்து நான்குங்களா..யா...சரி சொல்கிறேன் சரி பார்த்துகொள்ளுங்கள்....
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல் நீர பிற.

'In Spotless mind Virtue is Found
Not in Show and Swelling sound'
என்று சிறிது நேரத்தில் கூறிவிடுவார். அதிசயமாயிருக்கும்...ஆனால் அவரோ இதுபோல் உங்களாலும் செய்ய முடியும் என்று உற்சாகமூட்டுவார்.
அக்குறளின் விளக்கத்தை அவரது உணர்வுரையிலிருந்து.....
( குற்றமற்ற மனநிலையே அறமாகும். மற்றவை அனைத்தும் வெறும் ஆரவாரங்களே ).
'இந்த உலகத்தைப் பொறுத்தவரை அறத்தின் ஆற்றலை முழுமையாகப் பெறவேண்டும் என்றால் மனத்தூய்மையை அடைந்தே ஆகவேண்டும்!'என்பார் திருவள்ளுவர்.
'சரி, அந்த மனக்குற்றங்கள் என்ன ? என்ற கேள்விக்கு அடுத்த குறளில் விடையளிப்பார்.
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்' ( குறள் 35 )
"பொறாமை, தேவையை மீறிய ஆசை, கோபம், கடுஞ்சொல் போன்றவை மனக்குற்றங்கள்" என்பது இதன் பொருள்.
இவ்வாறு 1330 திருவள்ளுவரின் குறள்களுக்கு உணர்வுரை எழுதியவருடன் இமயமலை யாத்திரையா ?....என்று எண்ணும் போதே மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியது.
திருக்குறள் மட்டுமா....?
திரு.இராம.கனகசுப்புரத்தினம் அவர்கள் காலம் நமக்கு வழங்கியுள்ள கருத்துக் கருவூலம். ஞானக் களஞ்சியம். அவரது உள்ளம் திருமறைகளும் அவற்றை அருளிய மகான்களும் ஆட்சி செய்யும் ஆன்மிக அரசாங்கம்.
"உண்மைக்கு உயிர் கொடுப்போம்" எனும் கருப்பொருளுடன் ஒவ்வொரு மாதமும் வெளியீடு காணும் அவரது 'கவனகர் முழக்கம்' என்னைப்போன்ற ஞானசூன்யங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
'கவனகர் அய்யா'வுடன் தொடர்புகொண்டு இமயமலை யாத்திரையில் கலந்துகொள்ள அணியமாயிருக்கிறேன் என்று 2 மாதங்களுக்கு முன்பு உறுதியளித்ததிலிருந்து பயணத்திற்கு இன்னும் சில மணிநேரங்களே....என்று நினைக்கும்போது சொல்லொன்னா இனம்புரியா இன்பம்.
*புது டெல்லி பயணத்திற்கு 'சிங்கை சாங்கி விமான நிலையத்தில்' எப்படி காத்திருக்கிறேன் பாருங்கள்!
சும்மாவா உட்கார்ந்திருந்தேன்...?
கையில் முதல் நாள் இரவு தண்டாயுதபானி கோவிலில் வாங்கிய'அருட்பெருஞ்சோதி ஞானச் சித்தர்' எனும் புத்தம் புதிய புத்தகம்.
"நான் உரைக்கும் வார்த்த எல்லாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி நான் உரைக்கும் வார்த்தை அன்று"
இமயமலை யாத்திரை.....தொடரும்.

0 comments:
Post a Comment