Wednesday, March 10, 2010

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம் -‍ 2



இமாலயப் பயணம் தொடங்கியது.....

குருவருள் இல்லையெனில் திருவருள் இல்லை என்பது எவ்வளவு உண்மை! அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

அப்படியொரு அருமையான தருணம் எமக்கும் வாய்த்தது.

குருவுக்கு விழா : 2ஆம் ஆண்டாக ஜொகூர் பாரு,அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒத்துழைப்போடு சைவத்தைத் தமிழோடு மீட்டுக் கொடுத்த சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் நால்வருக்கும் விழா!


இனிய‌ ந‌ண்ப‌ர் திரு.பூப‌தி அவ‌ர்க‌ளின் அழைபினை ஏற்றேன்; விழா ஏற்பாட்டுக் குழுவில் துணைச் செய‌ல‌ர் பொறுப்பினையும் ஏற்றேன்.

நால்வ‌ர் விழா ஏற்பாட்டுக்குவில் தொண்டாற்றுவ‌து எம‌க்கு புதிய‌ அனுபாவம்.


இருப்பினும் விழா மிக‌ச் சிற‌ப்பாக‌ ந‌டைபெற்ற‌து. கோலால‌ம்பூரிலிருந்து சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ர்க‌ள் இருவ‌ர்: அ) திரு.பாலகிருஷ்ண‌ன் அவ‌ர்க‌ளும் திரு.த‌ரும‌லிங்க‌ம் அவ‌ர்க‌லும் முறையே திருஞான‌ச‌ம்ப‌ந்த‌ர் ப‌ற்றியும் திருநாவுக்க‌ர‌ச‌ர் ப‌ற்றியும் சொற்பொழிவு ஆற்றின‌ர். அவ‌ர்க‌ளை அடுத்து சிங்கை முனைவ‌ர் திரு சிவ‌குமார‌ன் அவ‌ர்க‌ள் சுந்த‌ர‌மூர்த்தி சுவாமிக‌ள் தொட‌ர்பான‌ ப‌ழ‌ஞ்செய்திக‌ளை வேறொரு கோண‌த்தில் அணுகி எடுத்துரைத்தார்.

விழா 2ஆம் நாள் இர‌வு ப‌ய‌ண‌ம். ம‌திய‌ம் ம‌ணி 3வ‌ரை நால்வ‌ர் விழாவில் இருந்தேன்.

0 comments: