Thursday, May 21, 2009

எண்ணங்களே....வண்ணங்களாய்..!



சும்மா... கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பழக்கப்பட்டவர்களை உங்கள் மனத்திரையில் கொண்டுவர முடியுமா ? முடிந்தால் மேலே படியுங்கள்; மனோவண்ணங்களைக் கண்டுபிடியுங்கள்!மனத்திதையில் பிரதிபலிக்கும் வண்ணங்களின் தன்மைகளைக் கொண்டு ஒருவரது எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியுமாம்!அதற்கு முன், வண்ணங்கள் என்ன எண்ணங்களைக் குறிக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.......இதோ வண்ணங்களின் தன்மைகள்:


சிவப்பு:


தெளிவாக சிவப்பு ஒளி பிரகாசித்தால் நல்ல ஆரோக்கியத்தையும் அதிகமான ஆழமான பாலுணர்வையும் குறிக்கும். மங்கலான சிவப்பு வண்ணம் கோபம்-வெறுப்பு மற்றும் எதிர்மறை எண்ணங்கள் - வஞ்சத் தன்மைகளைக் குறிக்கும்.


ஆரஞ்சு:


தெளிவாகவும் பிரகாசமாகவும் ஆரஞ்சு வண்ணம் தெரிந்தால் இவர்கள் மிகவும் கெட்டிக்காரர்களாகவும் மனவுறுதி படைத்தவர்களாகவும் இருப்பார்கள். மதிப்பு- மரியாதை ஆகிய பண்புகள் இவர்களிடம் இருக்கும். மங்கலான ஆரஞ்சு வண்ணம் - நம்பகமில்லாத தன்மைகளையும் மதிக்காத குணம் - தூக்கியெறிந்து பேசும் தன்மை மற்றும் அதிக விபரம் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.


மஞ்சள்:


பிரகாசமான மஞ்சள் வண்ணம் நல்ல உடல்வாகு - கவர்ச்சி - மதிப்பு - மரியாதை ஆகிய குணங்களை வெளிப்படுத்துகிறது. மற்றும் பலரையும் உபசரித்து மகிழ்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். மங்கலான மஞ்சள் ஒளியுள்ளவர்கள் நம்ப முடியாது.நயவஞ்சகத் தன்மை உள்ளவர்கள். இவர்கள் செயல்களும் பதட்டம் அவசரத் தன்மை இருக்கும்.


பச்சை:


நல்ல தெளிவான பச்சை வண்ணம் பிரகாசமாக இருந்தால் அது நேர்மை , நியாயம், அன்பு, பாசம் ஆகியவைகளைக் குறிக்கும். இவர்கள் உண்மையானவர்களாகவும் இருப்பார்கள். நமது வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உதவி செய்வார்கள். மங்கலான பச்சை வண்ணம் - போட்டி, பொறாமைக் குணங்களைக் குறிக்கும்.


நீலம்:


நல்ல பிரகாசமான நீல வண்ணம் உங்களுக்கு அமைதியையும் அன்பையும் தரக்கூடியது. கிரியாசக்திகள் நன்கு செயல்படுவதை இந்த பிரகாசமான நீல ஒளி குறிப்பிடுகிறது. இவர்கள் நல்லதையே செய்வார்கள். பிறருக்கு உதவி செய்வார்கள். மங்கலான நீல ஒளி சாதாரணமானவர்களாகத்தான் இருப்பார்கள்.


இண்டிகோ -


கருநீலம்: இந்த வண்ணம் சூட்சும சக்திகளின் ஆற்றல்களை வெளிக்காட்டுகிறது. தெளிவான கருநீலம் உள்ளவர்கள் சூட்சும சக்திகளை இயக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். உன்னத யோக நிலையை அடைந்தவர்கள். இவர்கள் ஞானிகள் யோக சித்திகள் அடைந்தவர்களாகவே அமைதியுடனும் ஆனந்தத்துடனும் அன்பு ஒளியை பரவச் செய்து கொண்டும் இருப்பார்கள்.


வயலட் - ஊதா:


நல்ல தெளிவான ஒளி பிரகாசத்துடன் வயலட் வண்ணம் ( ஊதா / கத்தரிப்பூ) தெளிவாக இருப்பதால் இவர்கள் மகான்கள்தான். எல்லாம் அறிந்தவர்களாக இருப்பார்கள். வயலட் - தங்க வண்ணம் - பச்சை போன்ற வண்ணங்களையும் பிரகாசிப்பவர்கள். மக்களுக்கு வழிகாட்டியாகவும் ஆன்மீக குருமார்களாகவும் ஆற்றல் மிகுந்து திகழ்வார்கள்.


1 comments:

')) said...

உலகமும் தமிழ் ஈழ விடுதலை புலிகளும்.
http://www.tamilusi.blogspot.com/