"ராஸ்பெரி பை" (Raspberry Pi)எனும் உலகிலேயே மிகச் சிறிய கணினி@பல்லூடக வன்பொருள் கருவி. இதன் அடிப்படை விலை US35 டாலர் மட்டுமே. ஆயினும் சில நாடுகளில் இதனுடன் சேர்த்து துணைக்கருவிகளையும் விற்கின்றனர்.
இது ஒரு credit card அளவுதான் என்றால் வியப்பாய் இருக்கும். "ராஸ்பெரி பை" -உடன் உங்கள் led தொலைகாட்சியும், தட்டச்சுக்கருவியும், ஒலிப்பெருக்கியும் போதும், ஒரு கணினி செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் செயல்படுத்தும் ஆற்றல்மிக்க கருவி என்றால் மிகையாகாது.
மேலும் இதனுடன் 2 USB port, இணைய இணைப்பு வசதி(internet port), HDMI port, audio out, RCA video port, மின்னிணைப்புக்காக Micro USB port, SD Card இணைப்பு வசதி என்று இருக்கின்றன.
இது SD card இல் ஏற்கனவே பதிவு செய்த ஆன்டிராய்ட் 2.3 அல்லது மேம்பட்டதில் செயல்படும்.