Thursday, May 30, 2013

உலகிலேயே மிகச் சிறிய கணினி:Raspberry PI Model B 512MB | Raspberry PI | Raspbian - Thunder Match Technology - The Largest I.T. Chain Store in Malaysia



"ராஸ்பெரி பை" (Raspberry Pi)எனும் உலகிலேயே மிகச் சிறிய கணினி@பல்லூடக வன்பொருள் கருவி. இதன் அடிப்படை விலை US35 டாலர் மட்டுமே. ஆயினும் சில நாடுகளில் இதனுடன் சேர்த்து துணைக்கருவிகளையும் விற்கின்றனர்.

இது ஒரு credit card அளவுதான் என்றால் வியப்பாய் இருக்கும்.  "ராஸ்பெரி பை" -உடன் உங்கள் led தொலைகாட்சியும், தட்டச்சுக்கருவியும், ஒலிப்பெருக்கியும் போதும், ஒரு கணினி செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் செயல்படுத்தும் ஆற்றல்மிக்க கருவி என்றால் மிகையாகாது.

மேலும் இதனுடன் 2 USB port, இணைய இணைப்பு வசதி(internet port), HDMI port, audio out, RCA video port, மின்னிணைப்புக்காக Micro USB port, SD Card இணைப்பு வசதி என்று இருக்கின்றன. 

இது SD card இல் ஏற்கனவே பதிவு செய்த ஆன்டிராய்ட் 2.3 அல்லது மேம்பட்டதில் செயல்படும்.



Wednesday, May 29, 2013

பாசீர் கூடாங் & மாசாய் வட்டார மக்களுக்காக "தகவல் அறிதிறன் விழிப்புணர்வு கருத்தரங்கு" - தொடர் சொற்பொழிவு -2

தமிழில் தகவல் அறிதிறன் (INFORMATION LITERACY) 

விழிப்புணர்வுக்  கருத்தரங்கு – தொடர் 

சொற்பொழிவு : 2


===================================================

தேதி / Date : 02.06.2013 (ஞாயிறு / Sunday )

நேரம் / Time : மாலை 5.00 க்கு

இடம் / Venue : ஜி.எஸ்.கெங்கன் அரங்கம் (Dewan G.S.GANGAN),


 No.9, Jalan Suria-6, Bdr Baru Seri Alam, Masai, Johor.

****

ஜோகூர் மாநில பாசிர் கூடாங் வட்டார இந்து சங்கப் பேரவையின் 

நல்லாதரவிலும் ஜோகூர் மாநில தகவல் அறிதிறன் விழிப்புணர்வு இயக்கம் – 

ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஒத்துழைப்பிலும் இந்நிகழ்ச்சி 

நடைபெறுகிறது.

Tuesday, May 28, 2013

ஜோகூர் மாநில அளவிலான "தகவல் அறிதிறன் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்புக்குழு"


ஜோகூர் மாநில அளவிலான "தகவல் அறிதிறன் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்புக்குழு" : 16.05.2013 முதல் தொடக்கம் கண்டது.

உத்தமம் தலைவர் திரு.சி.ம.இளந்தமிழ் இந்நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பு செய்தார்; விளக்கமளித்தார்.

புரவலர் : டாக்டர் கு.புருஷோத்தமன் அவர்கள் , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் திரு.இரா.சேதுபதி அவர்கள் பிரமுகர்கள் வந்து சிறப்புரையாற்றி வாழ்த்தினர்.

தகவல் அறிதிறன் விழிப்புணர்வு இயக்கம் : ஜோகூர் மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு


தேதி :16.05.2013 (வியாழன்), நேரம்: இரவு 8.00க்கு, இடம் : ஜோகூர் தமிழர் சங்க பணிமனை.
கடந்த ஆசிரியர் தினத்தன்று, ஜோகூர் மாநில அளவிலான "தகவல் அறிதிறன் விழிப்புணர்வு இயக்கம் " தொடக்கம் கண்டது.

உத்தமம் தலைவர் திரு. சி.ம.இளந்தமிழ் அவர்களின் வருகை, ஜோகூர் மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு , தெமெங்கோங் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரைஞரும் தமிழ்த் துறை தலைவருமாகிய திருமிகு இரா.சேதுபதி அவர்களின் சிறப்பு 'இணையத்தில் தமிழும் கற்றல் சூழலும்' எனும் சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது.

மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவராக திரு.இல.வாசுதேவன், உத்தமம் தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

12வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013 - மலாயா பல்கலைக்கழகமும் உத்தமமும் இணைந்து ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.