Tuesday, April 22, 2008

தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளதா ?

சர்ச்சைக்குரிய கேள்விதான் ? என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். தமிழ்ப்பள்ளியில் பணியை ஆரம்பித்து ( சுமார் 10 ஆண்டுகள் அனுபவம் ) தற்போது இடைநிலைப்பள்ளியில் போதித்தாலும், தமிழ்ப்பள்ளியின் பால் உள்ள பற்று குறையவில்லை.

பிறகு ஏன் இந்த கேள்வி ? ஆதங்கம்தான்...வேறென்னவாக இருக்க முடியும்?
அடிப்படையில் தமிழாசிரியர்கள் ( எமக்குப் போதித்தவர்கள், சம கால ஆசிரிய நண்பர்கள் சிலர் ) மாண்புக்குரியவர்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை!


இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி தொட்டு பலர் பேசிவருகிறார்கள்; விவாதிக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளின் அத்தியாவசிய வசதிகள் என்று பார்த்தால் - தேசிய மலாய் / சீன பள்ளிகளிடம் ஒப்பிடுகையில் மிகப் பெரிய இடைவெளி என்பது கண்கூடு!

தரம் என்று யாம் கேட்பது 'கற்றல் கற்பித்தல்' எனும் ஒரு கூறில்தான்.

தமிழ்ப்பள்ளிகளில் 'கற்றல் கற்பித்தலின்' தரம் உயர்ந்துள்ளதா ? அல்லது இன்னும் பழைய வழிமுறைகளையே கையாள்கிறார்களா ?


தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் உண்மையிலேயே தமிழ்ச்சமூக உணர்வோடு பணியாற்றுகிறார்களா ? 'கற்றல் கற்பித்தல்' மேன்மையுற என்னென்ன புதிய உத்திகளை இவ்வாண்டு ( முதல் கால் ஆண்டு ) பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய மனம் ஏங்குகிறது ? ஆங்கிலத்தில் 'Think out of the box' என்று கூறுகிறார்களே..... அதைப் பற்றி தமிழ்ப்பள்ளியாசிரியர்கள் நடைமுறையில் மாணவர்களுக்கு அப்படிப்பட்ட சிந்தனையாற்றலை வளர்க்கிறார்களா ?

இங்கு மற்றொரு கேள்வியும் எழுகிறது ? ( கேள்வியே பதிவாகிறது, என்ன செய்ய ?)
ஆறாம் ஆண்டு 'யூ.பி.எஸ்.ஆர்' மட்டும்தான் தமிழ்ப்பள்ளியின் தரத்தை உயர்வடையச் செய்யும் அளவையா ?

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிந்திப்பார்களா?